எம்மை பற்றி...
athour2 athour2 athour2

முனைவர் திரு. சி. சிதம்பரம் அவர்கள் அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் (M.A.), ஆய்வியல் அறிஞர் (Mphil) ஆகிய பட்டங்களைப் பெற்று “சோழ நாட்டுப் புலவர்களின் இலக்கிய கொள்கை (சங்க காலம்)” என்ற பொருளில் முனைவர் பட்ட ஆய்வினை (Ph.D) 2008 ஆம் ஆண்டில் நிறைவு செய்துள்ளார். ஆய்வியல் நிறைஞர் பட்டத்தில் பல்கலைக்கழக முதல்தரம் (FIRST RANK) பெற்றுத் தேர்ந்தவர். உயர்கல்வி மானியக்குழு நடத்தும் விரிவுரையாளர் தகுதிகாண் தேர்வில் (UGC-JRF&L) முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்று, இளநிலை / முதுநிலை ஆய்வாளராகத் திகழ்ந்தவர். மாநில அளவிலான விரிவுரையாளர் தகுதிகாண் தேர்விலும் (SLET) தேர்ச்சி பெற்றுள்ளார். கோயிற்கலையில் முதுநிலை பட்டையச் சான்றிதழ் (PGDTA) பெற்றுள்ள இவர் முதல்வன் என்ற தலைப்பில் (2004) நூல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். உறந்தைத் தமிழ்வளம் (2004) என்ற ஆய்வு நூலையும் வெளியிட்டுள்ளார். காந்தியச் சிந்தனை தொடர்பாக பட்டையச் சான்றிதழும் பெற்றுள்ள இவர், புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் நடத்திய கல்வெட்டுப் படியெடுத்தல், விலங்குகள், பறவைகளைப் பதப்படுத்துதல் குறித்து பயிற்சி சான்றிதழையும் பெற்றுள்ளார். சங்க இலக்கியம், கோயிற்கலை (Temple Arts) சமயம் தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வு மாநாடுகளிலும், ஆய்வு இதழ்களிலும் வெளியிட்டுள்ளார். இணையம் சார்ந்த கல்வி அறிவுடைய இவர், பல்வேறு தமிழ் இணைய இதழ்களிலும் கட்டுரைகளை வழங்கியுள்ளார்.

தற்போது காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தமிழ்ப்புலம், இந்திய மொழிகள் மற்றும் கிராமியக்கலைகள் துறையில், உதவிப்பேராசிரியராகப் (Assistant Professor) பணியாற்றி வருகிறார். அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் முதுமுனைவர் பட்ட ஆய்வாளராகவும் (POST DOCTORAL FELLOW) பணியாற்றியுள்ளார். அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் மையத்தில் உதவி ஆய்வாளராகவும் (Research Assistant) பணியாற்றியுள்ளார். உயர்கல்வி மானியக்குழு (UGC), இந்தியத் தேர்வு பணி மையம் (NTS-CIIL), தமிழ் செம்மொழி ஆய்வு மையம் (CICT) ஆகிய ஆராய்ச்சி மையங்களுக்கு முது முனைவர் பட்டத்திற்கு (PDF) ஆய்வு முன் வரைவு திட்டங்களைச் (Project) சமர்ப்பித்துள்ள இவருக்கு செம்மொழி மத்தியத் தமிழாய்வு மையம், சென்னை, இந்தியத் தேசியத் தேர்வுப்பணி மையம் ஆகியவை முதுமுனைவர் பட்ட ஆய்வாளராக (2009 - 2010) தேர்வு செய்து அனுமதி வழங்கியது. இவர் முப்பத்திரெண்டுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழ் கூறும் நல் உலகிற்கு வழங்கியுள்ளார். இணையத் தமிழ் (Internet Tamil), தேரோடும் வீதியிலே ..., உயர் கல்வி வளர்ச்சியில் இணையத்தின் பங்கு, தமிழில் மின் நூல்கள தயாரிப்பதில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும், குடுமியான்மலை ஒரு கலைக்கூடம், அறுபத்து மூன்று நாயன்மார்கள், திருமூலர் வலியுறுத்தும் வழிபாடு, பெண் நலம் போற்றிய பெருந்தகை, உள்வழிப்படுதல், புறநானூற்றில் கடைநிலை, உலகம் சுற்றிய தமிழன் முதலிய கட்டுரைகள் அனைவரது பாராட்டுதலையும் பெற்றவை.

இவர் முப்பத்திரெண்டுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழ் கூறும் நல் உலகிற்கு வழங்கியுள்ளார். இணையத் தமிழ் (Internet Tamil), தேரோடும் வீதியிலே ..., உயர் கல்வி வளர்ச்சியில் இணையத்தின் பங்கு, தமிழில் மின் நூல்கள தயாரிப்பதில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும், குடுமியான்மலை ஒரு கலைக்கூடம், அறுபத்து மூன்று நாயன்மார்கள், திருமூலர் வலியுறுத்தும் வழிபாடு, பெண் நலம் போற்றிய பெருந்தகை, உள்வழிப்படுதல், புறநானூற்றில் கடைநிலை, உலகம் சுற்றிய தமிழன் முதலிய கட்டுரைகள் அனைவரது பாராட்டுதலையும் பெற்றவை.

உலகத் தமிழர் அனைவரும் ஒன்று கூடி ஒவ்வொரு ஆண்டும் இணையத் தமிழ் மாநாட்டை நடத்தி வருகின்றனர். கடந்த 2002ம் ஆண்டு அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது. அவ்வமயம் தமிழிலில் வெளிவரும் ஆறாம் திணை இணையதளம் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டது. அதில் ஆய்வாளர் திரு. சி. சிதம்பரம் அவர்கள் எழுதிய இணையத் தமிழ் என்ற கட்டுரையை வெளியிட்டு சிறப்புச் செய்ததுகுறிப்பிடத்தக்கது.

நுழைக:www.aaraamthinai.com/tamilnet2002/inaiyathamizh.asp

முதல்வன், உறந்தைத் தமிழ் வளம் (2004), உள்வழி ஆகிய இவரது மூன்று நூல்களையும் அச்சுப் பதிப்பாக மட்டுமின்றி, மின் பதிப்பாகவும் (CD/EBOOK.), இணைய தளமாகவும் வெளியிட்டிருப்பது ஆய்வாளர் அவர்களின் தனித்தன்மைகளாகும். அதிக பக்கங்கள் கொண்ட நூல் பகுதிகளைக் கையடக்க வடிவில் சுருக்கமாகவும், எளிதில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் முதல்வன் என்ற தனது நூலையே குறுந்தகடாகவும் (ளீம்) இணைத் தளமாகவும் வடிவமைத்து வெளியிட்டுள்ளார். சாதாரண நூல்கள், அச்சுப் பிரதிகள் (Printed Books) இல்லாத சூழலில் மின் நூல்களாகப் புத்தகங்கள் வெளிவருவதால் அதனைத் தேவையான நேரங்களில் இணையத்தளத்தின் உதவியோடு எடுத்துப் பயன்படுத்த முடியும். அந்த வகையில் முதல்வன் மின் புத்தகம் (2004) தமிழ்ப்புத்தகப் பதிப்பில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து உறந்தைத் தமிழ்வளம் என்ற தனது ஆய்வு நூலையும் மின் நூலாக (2004) வெளியிட்டு, இணையத்திலும் பதிப்பித்துள்ளார்.

சங்கத் தமிழ் தொடங்கி இணையத்தமிழ் ஈறாக பதினைந்து ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து உள்வழி (2010) என்ற நூலையும் வெளியிட்டுள்ளார்.

புத்தகப் பதிப்பினை மின் நூலாக வெளியிடும் போது கணினியில் தமிழ் எழுத்துருக்கள் (Tamil Fonts) பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தின. இவற்றை Flash என்னும் மென்பொருளைப் பயன்படுத்தி மின் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இவ்வாறு மின் புத்தகம் தயாரிக்கும் போது ஏற்பட்ட சிக்கல்களையும், அதற்கான தீர்வுகளையும் மையமிட்டு ஒரு ஆய்வுக் கட்டுரையை (தமிழில் மின்நூல்கள் தயாரிப்பதில் ஏற்படும் சிக்கல்களும், தீர்வுகளும்) எழுதி வெளியட்டுள்ளார். இக்கட்டுரை தமிழில் புதிதாக மின் புத்தகம் வெளியிடுவோர்க்கு மிகுந்த பயன் அளிப்பதாக அமையும் என்பதில் ஐயமில்லை. பதிப்பகங்கள் கூட மின் புத்தகங்களை வெளியிட முன்வராத நிலையில் தனியயாரு மனிதர் சிறப்பாக மின் புத்தகம் தயாரித்து வெளியிட்டிருப்பது பாராட்டிற்குரியது. முதல்வன் மின் புத்தகம் குறித்து, தினமணி நாளிதழ் கடந்த டிசம்பர் 10, 2004 அன்று சிறப்பு செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது ஈண்டு நோக்கத்தக்கது.

தமிழில் இணையத் தளங்களை பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வரும் வேளையில் தனியாக ஆய்வாளர் சி. சிதம்பரம் அவர்கள் www.mudalvan.in என்ற இணைய தளத்தை நிறுவி, பல்வேறு செய்திகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் அதில் வெளியிட்டு நிருவகித்தது வருகிறார். தமிழ் இனி மெல்லச்சாகும் என்ற நிலையை மாற்றி, தமிழை எட்டாத உயரத்தில் ஏற்றி, காலம் காலமாக தமிழ் நிலைத்து நிற்கும் வகையில் ஆவண காப்பகமாக இவரது இணைய தளம் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முனைவர் சி. சிதம்பரம் அவர்கள், தூத்துக்குடி அனைத்திந்திய வானொலி நிலையத்தில் திருமந்திரம் தொடர்பாக இரண்டு பாடல்களை எடுத்து விளக்கவுரையாக (30 நிமிடங்கள்) ஆய்வுரை ஒன்றினையும் வழங்கி, உரையாற்றியுள்ளார். தமிழ் ஆய்வுலகில் பல்வேறு கோணங்களில் பரிணமித்து வருகிறார்.