ஆனால், இந்தியாவின் நவீன சாலைகளுக்கு முதல் களப்பலியே மரங்கள்தான். ஒவ்வொரு 100 கி.மீ.
சாலையும் சராசரியாக 2,000 பெரு மரங்களை பலி கொள்வதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது (சிறு
மரங்கள், செடி, கொடிகள் தனி). சூழலியல் சார்ந்து இப்பிரச்னையை அணுகுவது ஒருபுறமிருக்கட்டும்.
சாலைப் பயணங்களையே மிகக் கொடிய அனுபவங்களாக உருமாற்றிக்கொண்டிருக்கின்றன இந்தியாவின்
மரங்களற்ற நவீன சாலைகள்.
|