சமையல் குறிப்பு
கோஸ்மல்லி
தேவையான பொருட்கள்:
விதையுள்ள குண்டு கத்தரிக்காய் – 5
உருளைக்கிழங்கு – 1
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 6
புளி – ஒரு நெல்லிக்காயளவு
உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க
எண்ணெய் – 3 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 4
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
செய்முறை
கத்தரிக்காய்களை காம்பை மட்டும் நுனியில் நறுக்கி விட்டு, இரண்டாக வகுந்து குக்கரில் போடவும்.அதோடு உருளைக்கிழங்கையும் போட்டு, 2 விசிலுக்கு வேக விடவும்.புளியை உப்புச் சேர்த்துக் கரைத்து வடிகட்டி வைக்கவும்.வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். காய் வெந்ததும் குக்கரை இறக்கி, ஆறியதும் கத்தரிக்காய், உருளைக்கிழங்கு துண்டுகளின் தோலை நீக்கவும். பிறகு இரண்டையும் கையால் நன்கு பிசைந்து விட்டு,புளித்தண்ணீரில் போட்டுக்கலக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வரமிளகாய் பிய்த்துப் போட்டு வறுத்து, நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாயைச் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, கரைத்து வைத்திருக்கும் கோஸ்மல்லியைத் தூக்கி ஊற்றி, நன்கு பச்சை வாசனை போகக் கொதித்ததும் இறக்கவும்.
வாழைப் பூ வடை
தேவையான பொருட்கள்:
வாழைப் பூ – 1
துவரம் பருப்பு – 100
கிராம் கடலைப் பருப்பு – 100
கிராம் மிளகாய் வற்றல் – 10
சின்ன வெங்காயம் – 2
பூண்டு – 3
பல் சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1ஸ்பூன்
கறிவேப்பிலை – கொஞ்சம்
எண்ணெய் – 150 கிராம்
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
செய்முறை
கடலைப் பருப்பு, துவரம் பருப்புகளை ஊற வைத்து நெறு நெறுவென அரைத்துக்கொள்ளவும். வாழைப் பூவைச் சுத்தம் செய்து நரம்புகளை நீக்கிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். நறுக்கி வைத்துள் வாழைப்பூவை, நெறு நெறுவென அரைத்து வைத்துள்ள பருப்புகளோடு சோம்பு, பூண்டு சேர்த்து அரைத்து, வெங்காயத் துணடுகளையும் சேர்த்துப் பிசைந்து, தேவையான உப்பும், மிளகாய்த் தூளும் சேர்த்துக்கொள்ளவும். பிசைந்து வைத்திருக்கும் மாவை அடுப்பில் வாணலியில் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில், சிறிய வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன் நிறமாக வெந்ததும் எடுத்துச் சாப்பிடவும்
- ஜான்சி ராணி