கனடாவிலிருந்து கொள்ளுக்குடிபட்டிக்கு....
பறவைகளுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் தீபாவளி அன்று கூட வெடி வெடிக்காத கிராமம் ஒன்று தமிழகத்தில்இருக்கிறது. நம்ப முடியவில்லையா? கொஞ்சம் சத்தம் போடாமல் சிவகங்கை மாவட்டம் வரை வந்து செல்லுங்கள். தமிழகத்தின் குட்டி வேடந்தாங்கல் என்று அழைக்கப்படும் வேட்டங்குடி பற வைகள் சரணாலயம் காரைக்குடி- மதுரை சாலையில் உள்ளது. மதுரையிலிருந்து 51 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது இந்த சரணாலயம். வேடங்குடி கிராமத்தில்தான் முதலில் இந்தசரணாலயம் இருந்தது. ஆனால் வேடங்குடிக்காரர்கள் பறவைகளை சுட்டு சாப்பிடத் துவங்கியதால், சில ஆண்டுகளுக்கு முன்புபக்கத்தில் உள்ள கொள்ளுக்குடிப்பட்டிக்கு பறவைகள் இடம் பெயர்ந்து விட்டன. கொள்ளுக்குடிப்பட்டிக்காரர்கள் பறவைகளைபத்திரமாக பார்த்துக் கொள்கிறார்கள்.

கொள்ளுக்குடிப்பட்டி கிராமம், பாரதிராஜா படங்களில் வருவதுபோல அழகான கிராமம். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிஒன்றியம், எஸ்.எஸ்.கோட்டை என்ற சிறிய ஊருக்கு அருகில் உள்ளது இந்த கிராமம். இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான,சீமைக் கருவேல மரங்களுடன் கூடிய கண்மாய்க் கரை அருகே, 38.8 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காட்டுப்பகுதியில் உள்ளது. பாம்புதாரா, சாம்பல் நாரை, குருட்டுக் கொக்கு, மஞ்சள் மூக்கு நாரை, வெண்நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டி வாயன்,செம்பருந்து, பெண் மார்பு மீன் கொத்தி, பெலிகான் பிளாமிங் கோஸ் டோக் ஆகியவை இந்த சரணாலயத்தின் கஸ்டமர்கள்.

ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, ஸ்பெயின், கனடா, சைபீரியா, ஈரான், ஈராக் போன்ற நாடுகளிலிருந்து இவைகொள்ளுக்குடிப்பட்டிக்கு வருகின்றன. மொத்தம் 400-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இங்கு ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக வந்து செல்கின்றன.பறவைகளைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, கண்மாய்க் கரையோரங்களில் மேடைகள் அமைத்துத்தரப்பட்டுள்ளன. இதைத் தவிர, இரண்டு 30 அடி உயர கோபுரங்களும் (டவர்கள்) உள்ளன. இவற்றின் மீது ஏறி நின்று பார்த்தால் ..ஆஹா..ஆஹா.. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் என்று பாடத்தோன்றும்.அவ்வளவு அழகாகத் தோன்றும் அந்தப் பறவைக் கூட்டம். சுற்றுலாப் பயணிகள் இரவில் தங்கி பறவைக ளைப் பார்ப்பதற்குவசதியாக, பயணிகள் விடுதியும் உள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் முதல் மார்ச் வரை, காலை, மாலை இரு வேளைகளிலும் பறவைக ளைக் கண்டு களிக்கலாம்.இங்குள்ள தாய்ப் பறவைகள் கா லை 5.30 மணியளவில் கூட்டிலிருந்து கிளம்பி, இரை தேட புறப்பட்டு விடும். மாலை 5 மணிக்குத்தான் மீண்டும் கூடுகளுக்குத்திரும்பவரும்.

குஞ்சுப்பறவைகள், மெதுவாக கூட்டிலிருந்து கிளம்பி, பக்கத்தில் கண்மாய்க் கரைகளில் கிடைக்கும் இரையை சாப்பிட்டுக்கொள்ளும். காலை, மாலைகளில் அதிக அளவில் பறவைகளை இங்குகாணமுடியும்.இந்தப் பறவைகள் கொஞ்சம் கொடுத்த வைத்தவைகள். கொள்ளுக்குடிப்பட்டிக்காரர்கள் காட்டும் அபரிமிதமான அன்பில் அவைதிக்குமுக்காடி வருகின்றன. தங்கள் வீட்டுக் குழந்தைகளைப் போல இவற்றை அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.தீபாவளி போன்ற பண்டிகைகளின் போதும், இறப்பு மற்றும் பிற நிகழ்ச்சிகளின் போதும் இவர்கள் பட்டாசு வெடிப்பதில்லை.அந்த சப்தம் பறவைகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் கட்டுப்பாடாக இருக்கின்றனர்.
அதே போல, யாரும் வந்து பறவைகளை பிடித்துச் சென்று விடாமல் கண் கொத்திப் பாம்பாக இருந்து கண்காணிக்கின்றனர்.பறவைகள், தங்களைப் பிடிக்க யாரும் முயற்சி செய்தால், பலத்த குரலில் கத்தி ஊரைக் கூட்டி விடுகின்றன. உட னேகொள்ளுக்குடிப்பட்டியே திரண்டு வந்து சிறந்த முறையில் கவனித்து அவர்க ளை, காவல்துறையினரிடம் ஒப்படைத்துவிடுகிறது.

 
சிலகுறைகள்:

கடந்த சில வருடங்களாக இங்குள்ள கண்மாயில், நீர்வரத்து குறைந்துவிட்டது. இதனால் பறவைகளின் வருகையும் குறைந்துவருகிறது. கண்மாய்க்கு நீர் வரும் கால்வாய்களில் காட்டு ஆமணக்கு, சீமைக் கருவை செடிகள் அதிகமாக வளர்ந்துகால்வாயையே மூடிவிட்டதால்,நீர்வருவது தடைபட்டுள்ளது.இதை அகற்றினால் தடையின்றி நீர் வர ஏதுவாக இருக்கும். மேலும், இக்கண்மாயில், நிரந்தரமாக தண்ணீர் தேங்கியிருக்கஆழ்குழாய்க் கிணறுக ளை அரசு அமைத்துக் கொடுத்தால் நல்லது என கிராம மக்கள் அபிப்பிராயப்படுகிறார்கள். இதன் மூலம்படகுகளில் சவாரி செய்து கொண்டே பறவைகளை ரசிக்க முடியும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். (ஆனால், ஊருக்குள் ஒரே ஒரு குழாய் போட்டுவிட்டாலே (அதில் தண்ணீர் வருகிறதோ இல்லையாைே) அந்த சாதனையையே பலதேர்தல்களில் சொல்லி சொல்லி ஓட்டு கேட்கும் நம் ஊர் அரசியல் ஆசாமிகளிடம் போய் பறவைகளுக்கு தண்ணீர் வசதி கேட்டால்அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்பது நமக்கெல்லாம் தெரிந்தது தான்.)

கொள்ளுக்குடிப்பட்டிக் கிராம மக்கள் தங்கள் விவசாயத்திற்கு கண்மாய் நீரை யே அதிகம் நம்பியுள்ளனர். இதிலுள்ள நீரில்பறவைகளின் எச்சம் கலந்துள்ளதால், அதுவே இயற்கை உரமாகத் திகழ்கிறது. இதனால் பயிர்களுக்குப் பூச்சிகளின்பாதிப்பில்லாமல், நெல்மகசூல் அதிகரிப்பதாகமக்கள்கூறுகின்றனர்.சுற்றுலாப்பயணிகளை அதிக அளவில் கவரும் வகையில், தமிழ் நாடு வனத்துறை மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து பூங்கா,தேனீர் விடுதி, சிற்றுண்டி நிலையம் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்தால் இந்தப் பகுதி மிகப் பெரிய சுற்றுலா மையமாகமாறவும் வாய்ப்புள்ளது.

போக்குவத்து வசதியும் சரியாக இல்லை. டவுன் பஸ்கள் மட்டுமே இப் போது இங்கு நின்று செல்கின்றன. பிற பேருந்துகள்நிற்பதில்லை. கொள்ளுக்குடிப்பட்டியிலிருந்து 2 கி லோமீட்டர் தொலைவிலுள்ள எஸ்.எஸ்.கோட் டையில்தான் பஸ்கள்நிற்கின்றன. கொள்ளுக்குடிப்பட்டியில் அனைத்து பஸ்களும் நின்று, செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது கிராமத்துமக்களின் சின்னச்சின்ன ஆசை. வசதிகள் சிறப்பாக இருந்தால், இது தேசிய பறவைகள் சரணாலயமாகக் கூட மாறும் வாய்ப்பு உள்ளது. இப் பற வைகள்சரணாலயத்திற்கு தெற்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் புகழ் பெற்ற பிள்ளையார்பட்டி உள்ளது. இதன் சிறப்பு சொல்லித்தெரிவதில் லை. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அப்படி யேகொள்ளுக்குடிப்பட்டிக்கும் ஒரு விசிட் அடிக்கும் வகையில் போக்குவரத்து மற்றும் பிற வசதிகள் அமைய வேண்டும். .கொள்ளுக்குடிப்பட்டி சரணாலயம் குறித்த தகவல் பலகையையும் பிள்ளையார்பட்டியில் வைக்கலாம்.

 
போக்குவரத்துவசதி:
மதுரையிலியிருந்தும், காரைக்குடியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. மதுரைவிமான நிலையத்திலிருந்து 51 கிலோ மீட்டர் தொலைவிலும், திருச்சி விமான நிலையத்திலிருந்து 121 கி லோ மீட்டர்தொலைவிலும் வேட்டங்குடி உள்ளது.
 
இன்னும் விவரங்கள் தேவைப்பட்டால்

வன உயிரினக் காப்பாளர்,
மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசியக் காப்பகம்
ராமநாதபுரம் – 623501
என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.